மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்:-
மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கூலித்தொழிலாளர்கள்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவருடைய மனைவி தேவகி (30). இருவரும் கூலித்தொழிலாளர்கள். தேவகியின் நடத்தையில் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குமார், மனைவியை தாக்கி உள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவகிக்கு தலை உள்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆயுள் தண்டனை
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குமாரை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மனைவி தேவகியை கொலை செய்த குற்றத்திற்காக குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story