காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும்- டி.கே.சிவக்குமார்


காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும்- டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:56 AM IST (Updated: 19 Feb 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை 27ந் தேதி மீண்டும் தொடங்கும் டிகேசிவக்குமார்

பெங்களூரு: ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை தொடங்கப்பட்டது. 

அரசின் தடையை மீறி இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதயாத்திரை கனகபுரா, ராமநகர், பிடதி வழியாக பெங்களூருவுக்கு வர இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த பாதயாத்திரை 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்காலிகமாக ராமநகரில் முடித்து கொள்ளப்பட்டது.

மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பாதயாத்திரை வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், "மேகதாது பாதயாத்திரையை வருகிற 27-ந் தேதி ராமநகரில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த பாதயாத்திரையை பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் முடித்து கொள்ளப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

Next Story