வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு


வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 2:01 AM IST (Updated: 19 Feb 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காரியாபட்டி, 
காரியாபட்டி பேரூராட்சியில் 16 வாக்குச்சாவடி மையங்களுக்கும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு இணையதள கேமரா பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் 200 மீட்டர் இடைவெளிக்குள் எந்தவித கூட்டங்களும் கூடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் ஆய்வு செய்தார். 

Next Story