வாக்குச்சாவடி மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குச்சாவடி மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மையத்திற்குள் புகுந்த பாம்பினை பிடித்தனர். வாக்குச்சாவடி மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். பாம்பு பிடித்து வெளியேற்றப்பட்டதால் ஊழியர்கள் நிம்மதியாக தங்களது பணிகளை தொடங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story