பிரசாரத்தின்போது பா.ஜனதா வேட்பாளருக்கு குவா.... குவா.... பெண் குழந்தை பிறந்தது
கடையநல்லூர் பகுதியில் பிரசாரத்தின் போது பா.ஜனதா வேட்பாளருக்கு பெண் குழந்தை பிறந்தது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டில் பா.ஜனதா சார்பில் ரேவதி போட்டியிடுகிறார். இவர் குமந்தாபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் கடையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிரசாரத்தின்போது வேட்பாளர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேட்பாளர் ரேவதியின் கணவர் பெயர் பாலீஸ்வரன். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story