கேரள சினிமா உதவி எடிட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
குழித்துறையில் கேரள சினிமா உதவி எடிட்டர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
குழித்துறையில் கேரள சினிமா உதவி எடிட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சினிமா உதவி எடிட்டர்
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் பத்பநாபன் பிள்ளை. இவர் குழித்துறை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் இருந்தனர். இதில் மூத்த மகன் விசாக் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
விசாக், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி எடிட்டராக பணியாற்றி வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விசாக் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு விசாக்கை சாப்பிடுவதற்காக குடும்பத்தினர் அழைத்தனர். ஆனால், அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த பத்பநாபபிள்ளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு விசாக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
விசாரணை
இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாக் எதற்காக தற்கொலைசெய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story