பேரூராட்சி பெயரை வாகனத்தில் தவறாக எழுதியதால் பரபரப்பு


பேரூராட்சி பெயரை வாகனத்தில்  தவறாக எழுதியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 3:14 AM IST (Updated: 19 Feb 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் போது பேரூராட்சி பெயரை வாகனத்தில் தவறாக எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டது

பத்மநாபபுரம்:
வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் போது பேரூராட்சி பெயரை வாகனத்தில்  தவறாக எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. கல்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோதநல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை ஊழியர்கள் 2 வாகனங்களில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோதநல்லூர் பேரூராட்சி வாகனத்தை காணாமல் ஊழியர்கள் திணறினர். அப்போது தான் கோதநல்லூர் என்ற பெயருக்கு பதிலாக கொத்தநல்லூர் பேரூராட்சி என தவறாக எழுதி இருந்தது தெரிய வந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story