கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
x
தினத்தந்தி 19 Feb 2022 5:10 AM IST (Updated: 19 Feb 2022 5:10 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.36 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,749 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் 60 கிலோ கொண்ட முதல் தர நாட்டு சர்க்கரை மூட்டை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 100-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 20-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 60-க்கும் விற்பனை ஆனது. நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்துக்கு ஏலம் போனது.  
இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ ஒரே விலையாக ரூ.1,290-க்கு என மொத்தம் ரூ.61 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் மொத்தம் 36 லட்சத்து 68 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

Next Story