மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் வேண்டுகோள்


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Feb 2022 5:59 AM IST (Updated: 19 Feb 2022 5:59 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாராது வந்த மாமணி போல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் வந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தவில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நம்முடைய நகரத்திற்கான மேம்பாட்டு திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெற வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story