கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Feb 2022 3:48 PM IST (Updated: 19 Feb 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பழுது சரிபார்க்கும் பணிக்காரணமாக தற்காலிக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சென்னை,

இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகிய இரண்டும் கல்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு 2 அலகுகளில் தலா 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதல் அலகின் கொதிகலன் பழுதடைந்து தற்போது வரை இயங்காமல் முடங்கி உள்ளது. 2-வது அலகு மட்டுமே இயங்கி மின்சாரம் உற்பத்தியாகிறது.

இந்த நிலையில் 2-வது அலகின் நீராவி கடத்தும் குழாய் வால்வில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய தற்போது இங்கு தற்காலிகமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது பணிகள் முடிய ஒரு வாரம் ஆகும் என்றும், பழுது பணிகள் முடிந்தபின் மீண்டும், வழக்கம்போல் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story