ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகை போராட்டம்
தி.மு.க. பணம் பட்டுவாடா செய்வதாக கூறி ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரம்பூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 5 வார்டுகளில் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து அ.தி.மு.க. வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ராயபுரம் மனோ மற்றும் பகுதி செயலாளர் கன்னியப்பன் உள்பட 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க மூலக்கொத்தளத்தில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்துக்கு சென்றனர்.
ஆனால் அங்கு தேர்தல் அதிகாரி இல்லாததால் மண்டல அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் அங்கு வந்த தேர்தல் அதிகாரியிடம் இதுபற்றி புகார் அளித்தனர். இதுபற்றி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்துவதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்தார். அதை ஏற்று அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story