திமுக கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என காட்பாடியில் ஓட்டுப்போட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என காட்பாடியில் ஓட்டுப்போட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடந்தது. தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, அவருடைய மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா ஆகியோருடன் வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும்.
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கவர்னர் புதிய அணை கட்டுப்படும் என சொல்வது அரசு கூறுவது போல ஆகும்.
உச்சநீதிமன்றம் தற்போது உள்ள அணை பலமாக உள்ளது என தெரிவித்தும் புதிய அணை கட்டுவோம் என சொல்வது விஷமத்தனமானது.
முல்லைப் பெரியாற்றில் அணை கட்டுவோம் எனக்கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதை தடுக்க தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
கோதாவரி- கிருஷ்ணா நதி நீர் இணைப்பால் தமிழகத்திற்கு தண்ணீர் வரும் என்றால் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபித்தால் பகிரங்க மன்னிப்பு கேட்பேன்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க.வினர் தான் கோவை, வேலூர் உள்பட சில இடங்களில் அராஜகம் செய்துள்ளனர். நீண்டகாலமாக அமைச்சராக இருந்த ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டது அவ்வாறுதான். யார் அராஜகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story