கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க இடங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள்
கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க இடங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள்
பல்லடம், கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க இடங்களை பார்வையிட்ட நீதிபதிகள்.பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் இடப்பற்றாக்குறை, உள்ளதால் கடந்த 2020 வருடம் ரூபாய் 5.50 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதி அறைகள், எழுத்தர் அறை, நுாலகம், பதிவறை, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டுஅடுக்கு தளங்களுடன் கட்ட பூமி பூஜை போடப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் வந்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறப்பது குறித்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே வருங்கால தேவையை கருத்தில் கொண்டு, பல்லடத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம், கூடுதல்மாவட்ட நீதிமன்றம், மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான இடம் தேர்வு செய்வதற்காக திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இது குறித்து நீதிமன்ற தரப்பில் கூறியதாவது. ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகம், நீதிபதி அறைகள், எழுத்தர் அறை, நுாலகம், பதிவறை, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டுஅடுக்கு தளங்களுடன் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் குற்றவியல் நீதிமன்றம், கூடுதல்மாவட்ட நீதிமன்றம், மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தலைமையில், மாவட்ட தலைமை சார்பு நீதிபதி சந்திரசேகர், பல்லடம் நீதிபதி ஹரிராம், மற்றும் பல்லடம் தாசில்தார் தேவராஜ், மற்றும் அதிகாரிகள் உடுமலை ரோடு, கொசவம்பாளையம் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story