வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் வாக்களிப்பு தாமதம்
வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் வாக்களிப்பு தாமதம்
திருப்பூர், முருகம்பாளையம், பாரப்பாளையம் பகுதியில் பள்ளிகளில் வாக்கு எந்திரம் பழுதானதால் வாக்களிப்பது தாமதமாக நடைபெற்றது..
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டுக்குட்பட்ட முருகம்பாளையம், சூர்யா கிருஷ்ணா நகர், பகவதி அம்மன் நகர், அண்ணா நகர், இந்திரா காலனி, குளத்துப்பாளையம், பாரக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 11 ஆயிரத்து 637 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க ஏதுவாக முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளியை தேர்வு செய்து, பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணி முதலே அப்பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் பலரும் தங்கள் அடையாள அட்டையுடன் பள்ளியின் முன்பாக காத்திருந்தனர். கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகள் பின்பற்றி வாக்காளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
எந்திரம் பழுது
காலை 9 மணி அளவில் 396 அறையில் உள்ள வாக்கு எந்திரம் பழுதானது. உடனே பள்ளியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அதனை சரிசெய்ய முயற்சி செய்தனர். முயற்சி பலன் அளிக்காததால் வேறு வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டுவந்து பொருத்தி மீண்டும் வாக்களிக்க மக்களை அனுமதித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
இதேபோல் பாரப்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் காலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. உடனடியாக தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரியை மாற்றி மீண்டும் வாக்களிக்க மக்களை அனுபவித்தனர். இதனால் சிறிது நேரம் வாக்களிப்பு தடைபட்டது. கொங்கு மெயின்ரோடு சின்னச்்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளியிலும் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதானது. பின்னர் பழுது சீர் செய்யப்பட்டது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 86 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை வாக்களிக்க செய்ய அவரை ஒருவர் தூக்கி வந்தார்்.
Related Tags :
Next Story