திருவொற்றியூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிய தடை விதித்ததை கண்டித்து திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் தாங்கல் பள்ளிவாசல், செரியன் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஒட்டு மொத்த முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து பெண்களும் தலையில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.
Related Tags :
Next Story