‘இன்ஸ்டாகிராம்’ காதல்: சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது


‘இன்ஸ்டாகிராம்’ காதல்: சிறுமி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2022 6:20 PM IST (Updated: 19 Feb 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளம் மூலம் பழகி சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை அடையாறு பகுதியைச்சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 22). இவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளம் மூலம் பழகி, 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். பின்னர் அந்த சிறுமியின் வீட்டுக்கு கோகுல்ராஜ் சென்றார். அப்போது வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை கோகுல்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு அடிக்கடி இதுபோல கோகுல்ராஜ், சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சிறுமி விழித்துக்கொண்டு, கோகுல்ராஜின் காம களியாட்டத்துக்கு மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கோகுல்ராஜ், தனிமையில் உல்லாசம் அனுபவித்த செல்போன் படக்காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை உனது பெற்றோரிடம் காட்டி விடுவேன் என்றும் மிரட்டி சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்தார்.

ஆனால் கொதித்து எழுந்த சிறுமி, தன்னை உல்லாசத்துக்கு வற்புறுத்தி மிரட்டுவதாக கோகுல்ராஜ் மீது தனது பெற்றோர் மூலம் அடையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். புகாரில் உண்மை இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.

Next Story