நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தபால் ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தபால் ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2022 6:43 PM IST (Updated: 19 Feb 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், போலீசார், மற்றும் அரசு ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்குகள் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் 250-க்கும் மேற்பட்டோர் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏதுவாக ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.

அதேபோல் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை போட்டனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை வாக்கு எண்ணும் சில மணிநேரம் முன்புவரை செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story