நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. ஆனால் அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. ஆனால் அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்
x
தினத்தந்தி 19 Feb 2022 7:13 PM IST (Updated: 19 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. ஆனால் அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்

கோவை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற தி.மு.க. முயற்சிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

எஸ்.பி.வேலுமணி ஓட்டுபோட்டார்

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஓட்டுப் போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

கோவை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்து இருக்கிறோம். இதனால் கோவை மாவட்ட மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். 

கோவை மாவட்டத் தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றது. எனவே கோவை மாவட்டத்தில் தில்லுமுல்லு மற்றும் விதிமீறல்களை செய்து தி.மு.க.வினர் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.

இதனால் தான் கோவைக்கு கூடுதல் அதிகாரி நியமிக்கப் பட்டு உள்ளார். ஆனால் வடவள்ளி, காளப்பட்டி பகுதிகளில் வெளி மாவட்ட நபர்கள் இன்னும் இருக்கின்றனர். 

அவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனர். விதிமுறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் பதவி

கோவை மாநகராட்சி மேயர் பதவியை அ.தி.மு.க. நிச்சயம் கைப்பற் றும். வெளிமாவட்ட நபர்களை வெளியேற்ற கலெக்டர் முன்பே அறி விப்பு கொடுத்திருக்க வேண்டும். 

ஆனால் தாமதமாகத்தான் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஏதாவது சூழ்ச்சி செய்து வெற்றி பெற முயற்சிப்பார்கள்.

அ.தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. விதிமீறல் இருந்தால் அதிகாரிகள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Next Story