கூடலூரில் சக்தி விநாயகர் கோவில் தேர் வீதிஉலா
கூடலூரில் சக்தி விநாயகர் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கூடலூர்
கூடலூரில் சக்தி விநாயகர் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சக்தி விநாயகர் கோவில்
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
இதையொட்டி முதல் நாள் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜையும், முகூர்த்தக்கால் வைபவ நிகழ்ச்சி மற்றும் உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
கடந்த 15-ந் தேதி கணபதி ஹோமமும், மூலவருக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜையும் கோவில் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 18-ந் தேதி வரை காலை முதல் இரவு வரை மூலவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தேர் வீதி உலா
இதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 7 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகளும், 8.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் எழுந்தருளி தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story