கோத்தகிரியில் மாலை 5 மணிக்கு மேல் ஓட்டுப்போட வந்த வயதான தம்பதியை தடுத்த திமுகவினர்
கோத்தகிரியில் மாலை 5 மணிக்கு மேல் வந்த தம்பதியை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரியில் மாலை 5 மணிக்கு மேல் வந்த தம்பதியை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 4 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த பகுதிக்கான வாக்குச்சாவடி கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப் பட்டு இருந்தது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மேல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் வயதான முதியவர் தனது மனைவியுடன் மாலை 5.15 மணிக்கு அந்த வாக்குச்சாவடிக்கு வந்தார்.
தி.மு.க.வினர் வாக்குவாதம்
அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என தி.மு.க.வினர் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்தனர். ஆனால் 6 மணி வரை அனைவரும் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் கூறினார். இதனால் சுயேச்சை வேட்பாளருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மண்டல அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் வாக்களிப்பது பொதுமக்களின் உரிமை என்றும், 6 மணி வரை வாக்களிக்க விரும்புபவர்களை அனுமதிக்கலாம் என்றும் கூறினார்.
வாக்களிக்க அனுமதி
இதையடுத்து அந்த வயதான முதியவர் தனது மனைவியுடன் அந்த வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்துவிட்டு திரும்பினார்.
மேலும் மாலை 6 மணிக்கு வாக்குச் சாவடியில் வக்களிக்க காத்திருந்தவர்களை தவிர மற்ற அனைவரையும் போலீசார் வாக்குச் சாவடி பகுதியில் இருந்து வெளியேற்றி நுழைவு வாயிலை மூடினர். இந்த வாக்குச் சாவடி கோத்தகிரி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story