கள்ளக்குறிச்சியில் முதல் நபராக வாக்களித்து வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்திய கலெக்டர்

கள்ளக்குறிச்சியில்  முதல் நபராக வாக்களித்து வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்திய கலெக்டர்
x
தினத்தந்தி 19 Feb 2022 9:34 PM IST (Updated: 19 Feb 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் முதல் நபராக வாக்களித்து வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்திய கலெக்டர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 23 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 2-வது வார்டுக்குட்பட்ட கேசவலு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் முதல் நபராக வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பொதுவாக  கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகளில் பெரும்பாலானோர் வாக்குப்பதிவு தொடங்கி சில மணி நேரத்துக்கு பிறகுதான் வாக்களிப்பார்கள். ஆனால் நேற்று  கலெக்டர் ஸ்ரீதர் ஆர்வத்துடன் முதல் நபராக வந்து வாக்களித்த சம்பவம் வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

Next Story