திருக்கோவிலூர் 3 வது வார்டில் எந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதம்
திருக்கோவிலூர் 3 வது வார்டில் எந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட கீழையூர் டேனிஷ் மிஷன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை வாக்காளிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பட்டனை வாக்காளர் அழுத்தியதும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் வகையில் பீப் ஒலி எழவில்லை, சின்னத்தின் அருகில் உள்ள சிவப்பு விளக்கும் எரியவில்லை. இதனால் எந்திரம் பழுதடைந்தது தொயிவந்தது. இதையடுத்து அங்கிருந்த வேட்பாளர் மற்றும் அவர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
Related Tags :
Next Story