வாக்களிக்க விடாமல் தி.மு.க.வினர் தடுப்பதாக சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணா


வாக்களிக்க விடாமல் தி.மு.க.வினர் தடுப்பதாக சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 19 Feb 2022 10:01 PM IST (Updated: 19 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி 22-வது வார்டில் வாக்களிக்க விடாமல் தி.மு.க.வினர் தடுப்பதாக சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். உடனே போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி 22-வது வார்டில் வாக்களிக்க விடாமல் தி.மு.க.வினர் தடுப்பதாக சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். உடனே போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். 

வாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. அதாவது வாக்குச்சாவடிகளில் கூட்டமாக நிற்க கூடாது. சாதாரண வேட்டிகள் தான் கட்ட வேண்டும். கட்சி சார்ந்த வேட்டிகள் கட்ட கூடாது. 

வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்களை சட்டை பாக்கெட்டில் வைக்க கூடாது. வாக்காளர்களுக்கு உதவும் மையத்தினை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் அமைக்க கூடாது. பூத் சிலிப்பை அரசியல் கட்சியினர் வழங்க கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

பூத் சிலிப் வினியோகம்

இந்த நிலையில் பொள்ளாச்சியில் அரசியல் கட்சியினர் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. 

இதை தேர்தல் அதிகாரிகள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் பூத் சிலிப் வினியோகம் செய்ததாக தெரிகிறது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார் அங்கு வந்து இரு கட்சியினரையும் அங்கிருந்து வெளியேற்றினர். 

வரிசையில் நின்று...

மரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று பல வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சியினர் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தங்கள் விருப்பம் போல் செயல்பட்டனர். மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்ப வேண்டும். 

ஆனால் தேர்தல் விதிமுறைகளை மீறி சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

சுயேச்சை வேட்பாளர் தர்ணா

விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் சிலர் வாக்குப்பதிவை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்ஸ் வைத்திருந்தனர். 

பொள்ளாச்சி நகராட்சி 22-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முருகானந்தம் வாக்குச்சாவடிக்கு வந்தபோது தி.மு.க.வினர் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது.


Next Story