தஞ்சை மாநகராட்சி பகுதியில் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ. வாக்களித்தனர்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. வாக்களித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி பகுதியில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. வாக்களித்தனர்.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற சாதாரண உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் மாலையில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8.30 மணிக்கு தனது குடும்பத்தோடு வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தும் விதமாக அதிக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி ஆகியோர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது ஏற்படுத்தப்பட்ட சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் தான் இன்று வரை மக்களுக்கு பயனளித்து வருகிறது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தற்போது முதல்-அமைச்சராக இருப்பதால் இன்னும் வளர்ச்சி பெறும், தங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். எனவே தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் பெற்றி பெறும். ஜெயலலிதா, மோடி ஆட்சியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ.
தஞ்சை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு வாசலில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 9 மணிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
Related Tags :
Next Story