கும்பகோணம் நகராட்சி 14-வது வார்டில், வாக்கு எந்திரத்தில் கோளாறு
கும்பகோணம் நகராட்சி 14-வது வார்டில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் 1 மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் நகராட்சி 14-வது வார்டில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் 1 மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது.
வாக்கு எந்திரம் கோளாறு
கும்பகோணம் மாநகராட்சியின் 48 வார்டுகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி முழுவதும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வசதியாக 139 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 55 மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 14-வது வார்டான கும்பேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் மின்னணு வாக்கு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அந்த மையத்திற்கு வந்து பழுதான மின்னணு எந்திரத்தை சரிசெய்தனர். இதனால் 14-வது வார்டில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
கட்சியினருக்கு இடையே தகராறு
கும்பகோணம் பாலுசெட்டி தெரு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டியை அவரது உறவினர்கள் வாக்கு மையத்துக்கு தூக்கிவந்தனர். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
கும்பகோணம் டவுன் ஐஸ்கூல் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் முகவர்களை அனுமதிப்பது குறித்து இரண்டு கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார். மாலையில் கொேரானா நோயாளிகள் வாக்கு அளித்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக தனியாக மையங்கள் அமைக்க வேண்டும் என்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் அதிகாரிகள் போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலை கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story