தியாகதுருகம் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


தியாகதுருகம் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:48 PM IST (Updated: 19 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பேரூராட்சியில் 14 வார்டுகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தியாகதுருகத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது வார்டில் உள்ள மொத்த வாக்குகள், போட்டியிடும் வேட்பாளர்கள், பதிவான வாக்குகள், ஆண், பெண் வாக்குச்சாவடிகள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டறிந்த அவர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்தார்.  

தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்காளர்கள் கொண்டுவரும் அடையாள அட்டைகளின் விவரங்கள் குறித்து குறிப்பு எழுதும் நோட்டுகளில் குறித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அப்போது தேர்தல் மண்டல அலுவலர் சிவக்கொழுந்து, பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story