வாக்களிக்க முடியாமல் திரும்பிய வாக்காளர்கள்


வாக்களிக்க முடியாமல் திரும்பிய வாக்காளர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:26 PM IST (Updated: 19 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் திரும்பினர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 60 வாக்குசாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. காய்ச்சல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. பதற்றமான வாக்குசா வடிகளில் கூடுதலான போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பல வாக்குசாவடிகளில் 5 மணிக்கு மேல் வந்த வாக்களர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி ஆண்கள் வாக்குசாவடி உள்பட ஒருசில வாக்கு சாவடிகளில் 4.55 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் சந்திரா, தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று வாக்குசாவடி அலுவலர்களிடம் தேர்தல் ஆணைய விதிமுறைகளை எடுத்துக்கூறி 6 மணி வரை வந்த வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதித்தனர். முன்னதாக வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்களர்களும், பூத் ஏஜெண்டுகளும் வாக்குசாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story