தேனி மாவட்டத்தில் 68.94 சதவீதம் வாக்குகள் பதிவு
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 68.94 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேனி:
உள்ளாட்சி தேர்தல்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 5 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு 1,960 பேர் போட்டியிட்டனர்.
மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 1,63,122 ஆண் வாக்காளர்கள், 1,72,897 பெண் வாக்காளர்கள், 107 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3,36,126 வாக்காளர்கள் உள்ளனர்.
22 பேரூராட்சிகளில் 1,35,742 ஆண் வாக்காளர்கள், 1,42,382 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,78,159 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2,98,864 பேர் ஆண்கள், 3,15,279 பேர் பெண்கள், 142 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.
68.94 சதவீதம்
இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நகராட்சி பகுதிகளில் 361 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகளுக்கு 372 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 733 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாவட்டத்தில் 2,04,328 ஆண்கள், 2,19,137 பெண்கள், 24 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4,23,489 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 68.94 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும்.
6 நகராட்சிகளில் 1,06,735 ஆண் வாக்காளர்கள், 1,14,669 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,21,426 பேர் வாக்களித்தனர். இது 65.88 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும். 22 பேரூராட்சிகளில் 97,593 ஆண்கள், 1,04,468 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,02,063 பேர் வாக்களித்தனர். இது 72.64 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும்.
நகராட்சிகள்
6 நகராட்சிகளிலும் வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 62.87 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 86,894. பதிவானவை 54,627. பெரியகுளம் நகராட்சியில் 68.48 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 41,012. பதிவானவை 28,087. போடி நகராட்சியில் 66.20 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 69,857. பதிவானவை 46,242.
சின்னமனூர் நகராட்சியில் 65.95 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 37,369. பதிவானவை 24,645. கம்பம் நகராட்சியில் 65.59 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 65,077. பதிவானவை 42,681. கூடலூர் நகராட்சியில் 70.01 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 35,917. பதிவானவை 25,144.
பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு
பேரூராட்சி வாரியாக வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-
ஆண்டிப்பட்டியில் 69.26 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 26,796. பதிவானவை 18,559. போ.மீனாட்சிபுரத்தில் 85.14 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 7,570. பதிவானவை 6,445.
பூதிப்புரத்தில் 87.14 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 9,718. பதிவானவை 8,468. தேவதானப்பட்டியில் 77.69 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 16,311. பதிவானவை 12,672.
கெங்குவார்பட்டியில் 77.53 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 10,381. பதிவானவை 8,048. அனுமந்தன்பட்டியில் 72.22 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 9,930. பதிவானவை 7,171.
ஹைவேவிசில் 56.36 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 3,999. பதிவானவை 2,254. காமயகவுண்டன்பட்டியில் 70.60 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 15,366. பதிவானவை 10,849. கோம்பையில் 71.24 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 14,765. பதிவானவை 10,518. குச்சனூரில் 74.46 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 5,794. பதிவானவை 4,314.
மார்க்கையன்கோட்டையில் 81.46 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 5,549. பதிவானவை 4,520. மேலச்சொக்கநாதபுரத்தில் 81.21 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 14,014. பதிவானவை 11,381. ஓடைப்பட்டியில் 72.82 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 13,727. பதிவானவை 9,996.
பழனிசெட்டிபட்டியில் 67.06 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 13,894. பதிவானவை 9,317. பண்ணைப்புரத்தில் 72.85 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 8,747. பதிவானவை 6,372. க.புதுப்பட்டியில் 65.83 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 10,815. பதிவானவை 7,119.
தாமரைக்குளத்தில் 74.57 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 10,326. பதிவானவை 7,700. தென்கரையில் 76.57 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 12,937. பதிவானவை 9,906. தேவாரத்தில் 70.72 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 14,743. பதிவானவை 10,426.
உத்தமபாளையத்தில் 63.78 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 28,426. பதிவானவை 18,131. வடுகபட்டியில் 69.20 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 8,949. பதிவானவை 6,193. வீரபாண்டியில் 75.99 சதவீதம் வாக்குப்பதிவு. மொத்த வாக்குகள் 15,402. பதிவானவை 11,704.
வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னர் அவை மாவட்டத்தில் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் பெட்டிகள் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story