வாக்காளர் விழிப்புணர்வு போட்டி வழிகாட்டுதல் கூட்டம்
தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 25.1.22 முதல் 15.3.22 வரை நடத்தப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் தொடர்பான வழிகாட்டுதல் கூட்டம் மற்றும் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் குறித்தும், அதில் பங்கேற்கும் வழிகள் தொடர்பாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கி கூறினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்று வரும் அனைத்து மாணவர்களையும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் முழுஅளவில் பங்கேற்க செய்து அதிக அளவிலான பங்கேற்பை உறுதி செய்ய அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும் போட்டிகளில் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து கல்லூரி நிர்வாகத்திற்கும் அனைத்து துறை வாயிலாகவும், மாவட்ட நிர்வாகம் மூலமும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி கலெக்டர்கள், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், போராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story