42 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு
42 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அ.தி.மு.க , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தி.மு.க, ம.தி.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சி, சுயேச்சை உள்ளிட்ட 106 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்க ளிப்பதற்காக ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வந்தனர். அவர்கள் முககவசம் அணிந்து உடல் வெப்ப பரிசோதனைக்குபின் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ராமேசுவரம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அந்த பழுது சரி செய்யப்பட்டது. 20-வது வார்டில் வாக்காளரின் பெயர் குழப்பத்தால் ஒரு வாக்குச்சாவடியில் 15 நிமிடம் வாக்குப்பதிவு தடைபட்டது.
Related Tags :
Next Story