தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு


தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
x
தினத்தந்தி 19 Feb 2022 11:58 PM IST (Updated: 19 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்திலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து மாற்றப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 8, 17-வது வார்டுகளில் உள்ள 2 வாக்குச்சாவடிகளிலும்,   சாத்தான் குளம், ஏரலில் 4 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது கண்டறியப்பட்டு மாற்றப்பட்டன. 

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவான நிலையில் எந்திரம் பழுதடைந்ததால் மாற்றப்பட்டன. தங்கம்மாள்புரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதே போன்று நாசரேத் 11-வது வார்டு, புதூர் 1-வது வார்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு எந்திரம் பொருத்தப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

Next Story