திருவாரூர் மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.
திருவாரூர்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை அமைதியாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் உள்ள 216 கவுன்சிலர்களில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் 215 கவுன்சிலர் பதவிகளுக்கு 848 பேர் போட்டியிடுகிறார்கள்.
வாக்குப்பதிவு
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் வாக்குப்பதிவு மையத்துக்கு குடைபிடித்தபடி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்தனர். கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டது.
வாக்குப்பதிவு மையத்தில் அடையாள அட்டையை உள்ளதாக என்பதை சரி பார்த்து வாக்காளர்களிடம் உரிய கையெழுத்து பெறப்பட்டது. பின்னர் இடது ஆள்காட்டி கை விரலில் கருப்பு மை அடையாளம் வைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
Related Tags :
Next Story