நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில்ஆர்வமுடன் வாக்களித்த முதியோர்கள்- மாற்றுத்திறனாளிகள்


நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில்ஆர்வமுடன் வாக்களித்த முதியோர்கள்- மாற்றுத்திறனாளிகள்
x
தினத்தந்தி 20 Feb 2022 12:51 AM IST (Updated: 20 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் நடக்க முடியாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் நடக்க முடியாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
முதியோர்கள் ஆர்வம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்கள் நேற்று காலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 
அதிலும் நடக்க முடியாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் காலை 10 மணிக்கு முன்பாகவே ஆட்டோக்களில் வந்து வாக்களித்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கி நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களை வாக்குச்சாவடிகளில் நின்ற தேர்தல் பணியாளர்கள் 3 சக்கர தள்ளுவண்டியில் அமர வைத்து வாக்குச்சாவடிகளுக்குள் அழைத்து சென்று வாக்களிக்க உதவினர். வாக்களித்த பிறகு அவர்களை அதே 3 சக்கர தள்ளுவண்டி மூலம் ஆட்டோ அருகில் கொண்டுபோய் ஏற்றி அனுப்பி வைத்தனர். சில முதியோர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் வந்திருந்தனர். சில முதியோர் தனியாகவே ஆட்டோவில் வந்தனர்.
மாவட்டம் முழுவதும்...
இவ்வாறு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜான் (வயது 80) என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் ஒரு பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் வாத்தியார்விளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தங்கராஜ் (87) என்பவரும், மற்றொரு தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் கலைவாணர் நகரைச் சேர்ந்த லீலாவதி (77) என்பவரும் வாக்களித்தனர். 
இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடி சபையார்குளம் பகுதியைச் சேர்ந்த வனஜா என்பவர், வாய் பேச முடியாத, ஒரு கையும், ஒரு காலும் செயல் இழந்த சசிகுமார் (23) என்ற மாற்றுத்திறனாளி வாலிபரை ஆட்டோவில் அழைத்து வந்து இடலாக்குடி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க செய்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று பல முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்தோடு வந்து வாக்களித்ததை காண முடிந்தது.

Next Story