நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குப்பதிவு
நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநகராட்சி தேர்தல்
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்து வந்த நாகர்கோவில் நகரம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பாரம்பரியமும், வரலாற்று சிறப்புகளையும் கொண்டதாக நாகர்கோவில் மாநகராட்சி விளங்குகிறது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபிறகு முதல் முறையாக நேற்று மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுகளுக்கு 356 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
60.94 சதவீதம் பதிவு
காலையில் விறு, விறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் ஆக, ஆக விறு, விறுப்பு குறைந்து, இறுதியில் 56 சதவீதம் வாக்குகளே பதிவானது.
காலை 7 மணியில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவான வாக்கு சதவீதம் விவரம் வருமாறு:-
காலை 9 மணி நிலவரப்படி 10,530 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 4.26 ஆகும். 11 மணி நிலவரப்படி 47,618 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 19.25 ஆகும். மதியம் 1 மணி நிலவரப்படி 79,753 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 32.24 ஆகும்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 1 லட்சத்து 5 ஆயிரத்து 80 பேர் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 42.47 ஆகும். மாலை 5 மணி நிலவரப்படி 1 லட்சத்து 34 ஆயிரத்து 432 பேர் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 54.34 ஆகும். மாலை 6 மணி நிலவரப்படி 1,50,770 பேர் வாக்களித்திருந்தனர். மொத்தம் 60.94 சதவீத வாக்குகள் பதிவானது.
Related Tags :
Next Story