தமிழகத்தில் பா.ஜனதா ஆளுமையை தொடங்கி உள்ளது;முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் பா.ஜனதா ஆளுமையை தொடங்கியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் பா.ஜனதா ஆளுமையை தொடங்கியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் டதி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு அளித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பியும், அவர்களின் பேராதரவுடனும் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதாவினர் தேர்தலுக்காக எழுச்சியுடன் பணியாற்றுகின்றனர். இந்த தேர்தல் பா.ஜனதாவிற்கு நிச்சயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழகத்தில் பா.ஜனதா ஆளுமையை தொடங்கியுள்ளது.
தேர்தல் பணிகள் சிறப்பு
தேர்தலின்போது பணம் பட்டுவாடா காரணங்களால் நேர்மையானவர்கள் வருங்காலங்களில் தேர்தலை சந்திக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதற்கு ஒரு தனி இயக்கம் அமைத்திட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பாக உள்ளது. வாக்குச்சாவடிகளில் செல்போன் கொண்டு போகக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாக்காளர்கள் செல்போனை வைத்துவிட்டு வாக்களிக்க செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story