ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2022 1:33 AM IST (Updated: 20 Feb 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதியை சேர்ந்தவர் சீனியப்பா (வயது 57). அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாா்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்படி அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான நகலில் சீனியப்பாவிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கைதான கொத்தமங்கலத்தை சேர்ந்த கண்ணன் (42) மீதும் கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. அவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story