69.11 சதவீத வாக்குப்பதிவு
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.11 சதவீத வாக்குகள் பதிவானது.
பெரம்பலூர்:
வாக்கு சதவீதம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21,067 ஆண் வாக்காளர்களும், 22,634 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின(திருநங்கை) வாக்காளர்களும் என மொத்தம் 43,705 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பேரூராட்சியில் குரும்பலூரில் 5,390 ஆண் வாக்காளர்களும், 5,747 பெண் வாக்காளர்களும், என மொத்தம் 11,137 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அரும்பாவூரில் 5,286 ஆண் வாக்காளர்களும், 5,736 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தம் 11,023 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பூலாம்பாடியில் 3,771 ஆண் வாக்காளர்களும், 4,002 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 7,773 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
லெப்பைக்குடிகாட்டில் 5,100 ஆண் வாக்காளர்களும், 5,334 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தம் 10,435 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 110 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 வரை நடந்தது. இதில் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சியில் 66.01 சதவீதம்
அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 8.36, காலை 9 மணி முதல் 11 மணி வரை 18.76, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 36.17, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 47.67, மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 64.99, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 66.01.
இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 66.01 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 28,851 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 13,592 ஆண் வாக்காளர்களும், 15,259 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
குரும்பலூர் பேரூராட்சியில் 78.65 சதவீதம்
குரும்பலூர் பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்கு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 15.35,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 38.13,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 58.65,
மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 69.96,
மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 78.63,
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 78.65.
இதன்படி குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம் 78.65 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 8,759 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 4,052 ஆண் வாக்காளர்களும், 4,707 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
அரும்பாவூர் பேரூராட்சியில் 78.41 சதவீதம்
அரும்பாவூர் பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்கு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 15.45,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 35.66,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 55.86,மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 66.89, மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 78.17, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 78.41.
இதன்படி அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 78.41 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 8,643 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 3,946 ஆண் வாக்காளர்களும், 4,697 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
பூலாம்பாடி பேரூராட்சியில் 78.32 சதவீதம்
பூலாம்பாடி பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 8.13, காலை 9 மணி முதல் 11 மணி வரை 39.57, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 59.58, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 70.82, மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 78.12, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 78.32.
இதன்படி பூலாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 78.32 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 6,088 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 2,781 ஆண் வாக்காளர்களும், 3,307 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 55.24 சதவீதம்
லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குப்பதிவு விவரம் என மாலை 6 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் வருமாறு:-
காலை 7 மணி முதல் 9 மணி வரை 4.94,
காலை 9 மணி முதல் 11 மணி வரை 18.93,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 35.45, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 45.17, மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை 55.24, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 55.24.
இதன்படி லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் மொத்தம் 55.24 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 5,764 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 2,181 ஆண் வாக்காளர்களும், 3,583 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த பேரூராட்சியில் 80 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
69.11 சதவீத வாக்குகள் பதிவு
மாவட்டத்தில் மொத்தம் 58,105 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 26,552 ஆண் வாக்காளர்களும், 31,533 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 69.11 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டுப்பாட்டு கருவிகளை சீல் வைத்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடனும் வாக்கும் எண்ணும் மையத்திற்கு அனுப்பப்பட்டன.ேதர்தலில் பதிவான வாக்குகள் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் க.எறையூர் அருகே உள்ள மகாத்மா பப்ளிக் பள்ளியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதனால் அந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story