ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்


ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2022 1:42 AM IST (Updated: 20 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.

காரியாபட்டி, 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தம்பதி மகேசுவரன்-மகேசுவரி. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது அந்த 3 பேருக்கும் 19 வயது. இதில் மகேசுவரனின் மகள்கள் பெயர் விஜயலட்சுமி, ராமலட்சுமி, மகன் பெயர் ராமகிருஷ்ணன் ஆகும். இவர்கள் 3 பேரும் நேற்று நடந்த காரியாபட்டி பேரூராட்சி தேர்தலில் முதன்முதலாக ஓட்டு போட்டனர். அதாவது, சின்னக்காரியாபட்டி அரசு ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  பின்னர் மகிழ்ச்சி பொங்க வெளியே வந்த அவர்கள், இதுகுறித்து கூறுகையில், “முதன்முதலில் தேர்தலில் ஓட்டுப்போட்டு இருக்கிறோம். 3 பேரும் ஒரே நேரத்தில் வந்து வாக்குகளை பதிவு செய்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி தொடர்ந்து எங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுேவாம்” என்றனர். 

Next Story