உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

உப்பிலியபுரம், பிப்.20-
உப்பிலியபுரத்தை அடுத்த நாகநல்லூரிலிருந்து முத்தையம்பாளையம் செல்லும் வழியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் கீழே கிடந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நாகநல்லூர் ஊராட்சி அலுவலர் சின்னதுரை அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், அந்த பெண் சேலத்தை சேர்ந்த சஞ்சீவி-மூக்காயி தம்பதியின் மகள் சங்கீதா (வயது 21) என்றும், அவர் வைரிசெட்டிப்பாளையம் வந்த இடத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும், ேமலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story