அ.தி.மு.க.வினரிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல்
ராஜபாளையத்தில் அ.தி.மு.க.வினரிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் 24-வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு காந்தி நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி (வயது 53), லட்சுமணன் (56) ஆகிய 2 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ரூ.60 ஆயிரம் இருந்ததும், ஓட்டுக்கும் பணம் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது. எனவே பணத்தை பறிமுதல் செய்து, அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story