நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்


நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:00 AM IST (Updated: 20 Feb 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
தேர்தல்
சிவகாசி மாநகராட்சிக்கு முதல் தேர்தல் நேற்று காலை நடை பெற்றது. மொத்தம் உள்ள 111 வாக்குசாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் 7 மணிக்கு முன்னதாகவே அரசியல் கட்சி பிரமு கர்களும், பொதுமக்களும் வாக்களிக்க தயாராக வந்து இருந் தனர். வாக்குபதிவு தொடங்கியவுடன் ஆர்வத்துடன் வாக்க ளித்து விட்டு சென்றனர். காலை 8 மணி வரை வாக்குசாவடிகளில் மிதமான கூட்டம் காணப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.  
 இதேபோல் சிவகாசி 27-வது வார்டு பகுதி மக்கள் வாக்களிக்க அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் இருந்த எந்திரமும் கோளாறு ஏற்பட்டது. திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 12, 14 ஆகிய வார்டுகளின் வாக்குமையத்தில் இருந்தது எந்திரங்களும் கோளாறு ஆனது. இந்த வாக்கு எந்திரங்கள் பழுதானதால் 1 மணி நேரம் வாக்கு பதிவு பாதித்தது. இதே போல் சிவகாசி அம்மன்கோவில்பட்டி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் பயன்படுத்தப் பட்ட 2 வாக்கு எந்திரங்கள் பழுதானது. இதனால் அங்கு வாக்களிக்க வந்த சிலர் அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பிறகு வாக்கு எந்திரங்கள் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு வாக்குபதிவு 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. திருத்தங்கல் லயன்ஸ் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குசாவடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு வாக்கு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி சிறிது நேரம் வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.
நீண்ட வரிசை
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்க ளிக்க வசதியாக 111 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. 
இந்த வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 
சிவகாசி மாநகராட்சியின் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியின் முன்னிலையில் மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.  நேற்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்கு பதிவு தொடங்கியது. சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அதிகாலையிலேயே வாக்குசாவடிகளுக்கு சென்று தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். 
ஆய்வு 
அருப்புக்கோட்டையில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் நகராட்சி தேர்தல் பொறுப்பாளர்  கல்யாண்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Next Story