எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
தேசிய தரச்சான்றிதழ் வழங்க எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்க விண்ணப்பம் மத்திய அரசுக்கு, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மூலம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய தரச்சான்று மத்திய குழுவை சேர்ந்த மருத்துவர்கள் பாலஹீன் ஷிஷா போஸ்ங்கப், நிஷி கந்தா குடே ஆகியோர் எம். புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தனர். அப்போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) கலுசிவலிங்கம், நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரகுமார் மற்றும் நர்சுகள், லேப் டெக்னீஷியன்கள் இருந்தனர். ஆய்வுக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story