உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்
விருதுநகர் மாவட்டத்தில் உள் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் ஆக மொத்தம் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 363 பகுதிகளில் 2 பதவிகளுக்கு போட்டியில்லாத நிலையில் ஒரு பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 360 பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இதற்காக 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் 658 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அவற்றில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
தாமதம்
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் வாக்கு பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டியதை காண முடிகிறது.
விருதுநகரில் 2 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு சற்று தாமதமானது. ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குழப்பத்தால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. 11-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு சுலபமாக நடந்தது. மொத்தத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
103 பதட்டமான வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட தேர்தல் அதிகாரி மேகநாத ரெட்டியும் நேற்று காலையில் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்ைக நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இரவைப்பகலாக்கும் வகையில் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சியில் 68.47 சதவீதமும், 5 நகராட்சிகளில் 67.12 சதவீதமும், 9 பேரூராட்சிகளில் 76.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ெமாத்தம் 69.24 சதவீதம் ஆகும்.
Related Tags :
Next Story