அரிவாளால் வெட்டப்பட்டவர் சாவு
புதுக்கோட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டவர் உயிரிழந்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டையில் சம்பத்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அஜித்குமார் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு அஜித்குமார் தனது நண்பர் பிரேம் என்பவருடன் மது அருந்துவதற்காக பழனியப்பா கார்னர் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அஜித்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அஜித்குமார் இறந்தார். இதன் காரணமாக அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story