வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது


வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது
x
தினத்தந்தி 20 Feb 2022 2:14 AM IST (Updated: 20 Feb 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் 13-வது வார்டு திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் சில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல சிவகாசி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் சிவகாசி பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், திருத்தங்கல் பகுதியில் உள்ள 2 வாக்குசாவடிகள் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. உடனே அதிகாரிகள் அதனை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு ஏதும் பாதிக்கப்படவில்லை. வத்திராயிருப்பு அருகே சுந்தர பாண்டியம் பேரூராட்சியில் 9-வது வார்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் 1 மணி நேர தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

Next Story