வாக்களித்த அரசியல் பிரமுகர்கள்


வாக்களித்த அரசியல் பிரமுகர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:25 AM IST (Updated: 20 Feb 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர்.

தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதியில் உள்ள ஏ.ஜி. தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஓட்டு போட்டார். வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார் சுரண்டை நகராட்சி  தேர்தலில், சுரண்டை- ஆலடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

Next Story