சபாரி வாகனத்தை துரத்திய காட்டு யானை


சபாரி வாகனத்தை துரத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 20 Feb 2022 2:33 AM IST (Updated: 20 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

சபாரி வாகனத்தை காட்டுயானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் தாலுகாவில் கே.குடி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிக்குள் வனத்துறை சார்பில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சபாரி அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாகனம் ஒன்றில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சபாரி அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகள் சபாரி சென்று வனவிலங்குகளை கண்டு ரசித்தனர். 

அப்போது சபாரி வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்தது. இதனால் சிறிது தூரம் முன்பே டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். இந்த நிலையில், அந்த காட்டு யானை, சபாரி வாகனத்தை துரத்தியது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் வாகனத்தை துரத்திய காட்டு யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. காட்டு யானை துரத்தியதால் வாகனத்தில் இருந்தவர்கள் அலறினார்கள். 

அந்த யானை திரும்பி சென்ற பிறகே சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story