எங்களுக்கு போட்டி தி.மு.க. தான்-செல்லூர் ராஜூ பேட்டி


எங்களுக்கு போட்டி தி.மு.க. தான்-செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2022 2:39 AM IST (Updated: 20 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு போட்டி தி.மு.க. தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 

மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் நாம் வாக்களிக்கும் போது, யாருக்கும் வாக்களித்தோம் என்று ஒரு சிலிப் விழும். 
ஆனால் இந்த தேர்தலில் அது இல்லை. வெறும் மெஷின் மட்டும் தான் இருக்கிறது. நான் இது குறித்து கேட்ட போது, அந்த எந்திரம் தரவில்லை என்று கூறினார்கள். 
எனவே இது எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் முறைகேட்டில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. 
அன்பளிப்பு, பணம் எல்லாம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் விதியை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நடிகர் விஜய் மட்டுமல்ல, நாங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை வாக்கு மூலம் நிறைவேற்றி இருக்கிறார்கள். 
எங்களுக்கு போட்டியாக நடிகர் விஜய்யை நினைக்க வில்லை. எங்களுக்கு போட்டி தி.மு.க.வைதான். வேறு யாருமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story