வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அமெரிக்காவில் இருந்து வந்த மாணவி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அமெரிக்காவில் இருந்து வந்த மாணவி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தாா்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டுக்கு உள்பட்ட கொங்கம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 19) என்பவர் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஈரோடு வந்துள்ள அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார். ஆனால் அவரது பெயர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தேசிய வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருப்பதாக மோனிகா கூறினார். ஆனால் அவரது பெயரை பட்டியலில் தேடிப்பார்த்த தேர்தல் அதிகாரிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறினர். இதனால் மாணவி மோனிகா தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்கை செலுத்த முடியாமல் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story