மது விற்ற வாலிபர் கைது
கோவில்பட்டி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள திட்டங்குளம் கிராம பகுதியில், மது விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி தலைமையில் போலீசார், திட்டங்குளம் முத்து நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த மலையரசன் மகன் அன்பரசன் (வயது 27) என்பவரை பிடித்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிழக்க ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story